Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை

28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை

1989-ல் நடிக்க ஆரம்பித்த ராஜ்கிரண், இதுவரை தமிழ் தவிர வேறு மொழிப் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் இவருக்கு தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளில் இருந்தும் அழைப்பு வந்தது ஆனால் அவர் அவை எதையையும் ஏற்கவில்லை. இந்நிலையில் அவர் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

அஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்முட்டி நாயகனாக நடிக்கும் ‘ஷைலாக்’ என்ற மலையாளப் படத்தில் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ‘ராஜாதி ராஜா’, ‘மாஸ்டர் பீஸ்’ படங்களுக்குப் பிறகு அஜய்யின் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் மூன்றாவது படம் இது. இதில் நடிகர் ராஜ்கிரண் மலையாளத்தில் அறிமுகமாகவிருக்கிறார்.

இதில் மம்முட்டியுடன் நடிகை மீனாவும் நடிக்கிறார். 1991-ல் வெளியான நாயகனாக ராஜ்கிரணின் முதல் படமான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனா. படம் வந்தபோது அந்த ஜோடி பெரிதளவில் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவேயில்லை.

இந்நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணையவிருக்கிறது. தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் உருவாகும் என்று தெரிகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

அதே சமயம் சத்தமே இல்லாமல் படத்தின் துவக்க விழாவை சமீபத்தில் நடத்தியிருக்கிறது படக்குழு. இந்நிலையில் இந்தப் படம் குறித்த தகவலை ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க : மலேசியாவில் வசமாக மாட்டிக்கொண்ட சீயான் விக்ரம்! சிக்கலில் கடாரம் கொண்டான்

இந்தப் படத்தில் ராஜ்கிரண் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மம்முட்டி, “ராஜ்கிரண் மிகவும் யோசித்து தேர்வு செய்யும் நடிகர். அவருக்கு இந்தப் படத்தில் வலிமையான கதாபாத்திரம் உள்ளது” என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க : தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்! பாடல் வெளியாகும் முன்பே இப்படியா?

எது எப்படியோ சேட்டன்களின் எலும்பு பத்திரம்

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Exit mobile version