Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாற்பது வருடங்களுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் மீனா! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமா உலகத்தில் ஒரு காலத்தில் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மீனா இவர்களுடைய அழகில் சொக்கிப் போகாத நடிகர்களும் கிடையாது, ரசிகர்களும் கிடையாது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அழகு ராணியாக வலம் வந்தார் நடிகை மீனா. என்ன தான் மிகப் பெரிய நடிகையாக இருந்தபோது ஒரு காலகட்டத்தில் அவருடைய மார்க்கெட் டல் அடிக்க தொடங்கும் அந்த சமயத்தில் சரியாக திருமணம் செய்து கொண்டு எல்லோரும் சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார்கள்.

அதையேதான் இவரும் செய்தார். கடந்த 2009ஆம் வருடம் வித்யாசாகர் என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். தற்சமயம் அவருக்கு நைனிக்கா என்ற மகள் இருக்கிறார். அவரும் விஜயின் தெறி படத்தில் நடித்திருக்கிறார்.

சினிமாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருந்த நடிகை மீனா மறுபடியும் சினிமாவிற்குள் ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.. அந்த விதத்தில் மறுபடியும் தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளை கொண்டாடிய மீனா அண்மையில் விஜய் சேதுபதியிடம் ஒன்றை கற்றுக் கொண்டதாக தெரிவித்திருக்கின்றார். நடிக்க ஆசையாக இருப்பதாக நடிகை மீனா தெரிவித்திருக்கின்றார்.

இதன்காரணமாக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவும் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கிறார் மீனா சிறுபிள்ளை போல தோற்றமளிக்கும் நடிகை மீனா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தால் அது சரிவராது என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

Exit mobile version