Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் மரணம்

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் மரணம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா.இவர் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பின்னர் பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விட்டார்.இந்நிலையில் கடந்த வருடம் மீனா மற்றும் அவருடைய கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னைக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

சிகிச்சைக்குப் பின் ஓரளவிற்கு பாதிப்பிருந்து மீண்ட அவரது கணவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது.பெங்களுரில் தங்கியிருந்த போது அவர்கள் வீட்டிற்கு அருகில் புறா வாழ்ந்து வந்தது காரணமாக கூறப்படுகிறது.அதனுடைய எச்சம் தான் நுரையீரல் தொற்றுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சுவலிக்காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் சில தினங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று காலமனார்.

 

Exit mobile version