Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென அஜித்துக்கு  அட்வைஸ் பண்ணும் மீரா மிதுன்!அட்வைஸ்ல ஆரம்பிச்சு என்ன பண்ண போறாங்களோ?

மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர் மீரா மிதுன்.இவர் மாடலிங்கில் ஆரம்பித்து விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 சீசன் 8  பங்கேற்றார்.பின்னர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.

அதன்பிறகு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில்  பங்கேற்று வீட்டில் உள்ளே பெரிய சர்ச்சையையும் கிளப்பினார்.மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னும் சர்ச்சை குறைந்தபாடில்லை.மேலும் இவருக்கு சினிமா வாய்ப்பு ஒன்றும் பெரிதாக கிடைக்கவும் இல்லை.

இவர் சில நாட்களாக இந்த விரக்தியின் காரணமாக சினிமாவில் இருக்கும் பிரபல நடிகர்களை மற்றும் இயக்குனர்களை யார் எவர் என்று கூட பார்க்காமல் வயதிற்கு மரியாதை கொடுக்காமல் கண்டபடி இஷ்டத்திற்கு பேசி வந்தார்.

சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றில் தல அஜித் எந்த ஒரு பிரச்சினைக்கும் வீட்டை விட்டு வெளியில் வராததை கலாய்த்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டது.மேலும் இது அவரது ரசிகர்களை கோபப்படுத்தியது.

இந்த நிகழ்வு பற்றி மீரா மிதுன் ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்துள்ளார்.           “அஜித் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர் இதை மனதில் வைத்து கோங்க.  விஜய் போல வீரராக இசை வெளியீட்டில் பேசிவிட்டு பின்னர் மன்னப்பு கேட்பவர் கிடையாது அஜித். தானா உயர்ந்த ஒரு மனிதனை இதுபோல அசிங்க படுத்தியது தவறான ஒன்று. அவர்கள் அவரும் அவதூறு வழக்கு தொடுக்கும் நேரம் வந்துவிட்டது.”என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.தலக்கே அட்வைஸ் கொடுத்தாரா!!!அடுத்து என்னவா இருக்கும் என்ற குழப்பத்தில் ரசிகர்கள்.

Exit mobile version