Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சசிகலாவின் திடீர் அறிவிப்பால் நடு இரவில்நடந்த மீட்டிங்! பின்னனியின் மர்மம் என்ன?

Meeting held at midnight due to the sudden announcement of Sasikala! What is the mystery behind it?

Meeting held at midnight due to the sudden announcement of Sasikala! What is the mystery behind it?

சசிகலாவின் திடீர் அறிவிப்பால் நடு இரவில்நடந்த மீட்டிங்! பின்னனியின் மர்மம் என்ன?

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டம்மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து திமுக மற்றும் அதிமுகவினர் இடையே அதிக அளவில் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா தேர்தல் நெருங்கி வரும் வேலையில் கடந்த மாதம் வெளியே வந்தார்.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவருடைய ஆதரவாளர்கள் நல்ல வரவேற்பை அளித்தனர்.அதே நேரத்தில் தமிழக அரசு அவருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது. அதில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டன.இவ்வாறு செய்தது இவர்கள் அரசியலில் கால் பதிக்க கூடாது என்பதற்காக கூட இருக்கலாம் என அனைவராலும் பேசப்பட்டது .இந்நிலையில் பல கட்சிகள் தன்னுடன் கூட்டணி வைத்துக்கொள்ள சசிகலாவை அணுகிய போது அவர் எந்த கட்சியினுடனும் கூட்டணி அமைக்கவில்லை.

அப்போது அவர் கூறியது,நான் அம்மாவின் கட்சிக்கு மட்டுமே உண்மையுடன் செயல்படுவேன் என்றார்.பலவகை கட்டுபாடுகள் தமிழகம் வந்த சசிகலாவிற்கு காத்திருந்தது.இதனையடுத்து நேற்று இரவு 9 மணியளவில் திடுக்கிடும் அறிக்கை ஒன்றை சசிகலா அறிவித்தார்.

அதில் சசிகலா கூறியது,நான் அரசியலை விட்டு விலகுகிறேன்.ஜெயலலிதா வின் பொற்கால ஆட்சி அமைய கடவுளிடம் பிராத்திப்பேன் என பரபரப்பு தகவலை வெளியிட்டார்.ஜெயலிதாவின் அன்பு தொண்டர்களுக்கு மற்றும் மக்களுக்கு நான் நன்றியுடன் இருப்பேன்.ஜெயலலிதாவின் ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

சசிகலாவின்  இந்த திடீர் அறிவிப்பால் அமமுக கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இவரின் இந்த திடீர் அறிவிப்பால் செய்வதறியாத டிடிவி தினகரன் இரவு முழுவது தூங்காமல் இருந்துள்ளார்.நள்ளிரவில் தொலைப்பேசி மூலம் முக்கிய ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து கூடத்தை கூட்டி பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளார்.சசிகலா வெளியிட்ட இந்த அறிவிப்பால் கட்சியின் நிலைமை இன்னுமா மோசமாக அதிக வாய்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

Exit mobile version