Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுகவின் மூத்த தலைவர் சசிகலாவுடன் சந்திப்பு!  ஓபிஎஸ் கூட்டணி சேர ஒத்திகையா?

Meeting with AIADMK senior leader Sasikala! Rehearsal to join OPS alliance?

Meeting with AIADMK senior leader Sasikala! Rehearsal to join OPS alliance?

அதிமுகவின் மூத்த தலைவர் சசிகலாவுடன் சந்திப்பு!  ஓபிஎஸ் கூட்டணி சேர ஒத்திகையா?

அதிமுக கட்சி தற்போது இரு தரப்புகளாக பிளவுற்றுள்ளது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் மறுபக்கம் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களும் உள்ளனர்.இதில் பலரின் கோரிக்கையாக ஓபிஎஸ் தினகரன் மற்றும் சசிகலா ஆகியவை இணைய வேண்டும் என்பதுதான். இவ்வாறு இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டு வந்தால் கூட கூட்டு சேர்க்க மாட்டேன் என கூறி வருகிறார்.

அதுமட்டுமின்றி அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து ஓபிஎஸ் செல்லா காசாக மாறிவிட்டார். அதனால் இவர் தினகரன் சசிகலாவுடன் மீண்டும் இணைந்து விடுவார் என கூறி வருகின்றனர். கையில் ஓபிஎஸ் ஆதரவாளர் மற்றும் மூத்த தலைவரான வைத்தியலிங்கம் தஞ்சாவூரில் இன்று சசிகலாவை சந்தித்துள்ளார். அவர் பிறந்த நாளை ஒட்டி இன்று வி.கே சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். ஓபிஎஸ் விரைவில் வி.கே. சசிகலாவுடன் இணைந்து சின்னம்மா கட்சிக்கு தொண்டாற்ற போகிறார் என்பது போல் இச்சம்பவம் எடுத்துரைத்து உள்ளது.

Exit mobile version