Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்! தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கை!

தமிழகத்தில் நோய்த்தொற்று ஏற்பட அளவு அதிகரித்து வந்தன. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதன் காரணமாக, நோய்த் தொற்று பரவl கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது அதோடு தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகின்றது.அதோடு மட்டுமல்லாமல் மத்திய மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்கள். அதனை ஆரம்பத்தில் பொதுமக்கள் சரிவர கருவி பிடிக்காவிட்டாலும் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டதன் விளைவாக பொதுமக்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து வருகிறார்கள்.

நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை குறைய தொடங்கியதை தொடர்ந்து மத்திய ,மாநில அரசுகளும், பொதுமக்களும் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஆனால் திடீரென்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நோய்த்தொற்று பரவலின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த மூன்றாவது அலை குழந்தைகளை பெரும்பாலும் பாதிக்கும் என்றும், ஒரு எச்சரிக்கை விடுத்தது இதனால் மத்திய, மாநில அரசுகள் மீண்டும் உஷாராக தொடங்கின.

இந்தநிலையில், தற்சமயம் நேற்றையதினம் முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி மற்றும் பேரூராட்சி ஊராட்சிகளில் என ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் மிகப்பெரிய தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கின்ற இந்த தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்று அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் மிக ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் விளைவாக மாலை 3 மணி அளவில் தடுப்பூசிகள் அனைத்தும் தீர்ந்து போய் விட்டதால் மருத்துவர்கள் முகாமை அறிவித்த நேரத்திற்கு முன்பாகவே முடித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. அதோடு இந்த தடுப்பூசி முகாமில் 10 சதவீத அளவிலான நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு மாநில அரசு திட்டமிட்டு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்துவருகின்றது. முதன்முறையாக முன் களப் பணியாளர்களுக்கு மட்டும் இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை அடுத்து 60 வயதிற்கும் அதிகமானவர்களுக்கு அவர்களை அடுத்து 45 வயது உடையவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.தமிழ்நாட்டில் தமிழக அரசு உண்டாக்கிய விழிப்புணர்வின் காரணமாக, தடுப்பூசி மீதான பயம் ஒழிந்து பொதுமக்கள் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக, தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தடுப்பூசியை அனைத்துப் பகுதியினருக்கும் பிரித்து அனுப்பி அதனை செலுத்தும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டது தமிழக சுகாதாரத் துறை.நேற்று காலை 3.75 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறை கூறியது இந்த சூழ்நிலையில், மாபெரும் தடுப்பூசி முகாம் மூலமாக ஒரே தினத்தில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. முப்பத்தி எட்டு மாவட்டங்களில் 40 ஆயிரம் முகாம்கள் போடப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. இதில் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை விடவும் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. அதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் 28 லட்சத்து 93 ஆயிரத்து 27 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த முகாமில் இருபத்தி ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 526 நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 7 லட்சத்து 42 ஆயிரத்து 491 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோயமுத்தூர், சென்னை, திருவள்ளூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. குறைந்தபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து இருபத்தி ஒன்பது பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

மெகா தடுப்பூசி முகாம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய வலைத்தளத்தில் மாராத்தான் வேகத்தில் செயல்படும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார். அதோடு ஒரே நாளில் இத்தனை நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பது இந்தியாவின் சாதனை இதுவரையில் நான்கு கோடி பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை என குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் போட்டுக்கொள்ளுங்கள் நம்மையும் காப்போம்,நாட்டையும் காப்போம் என அவருடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Exit mobile version