மெகா தடுப்பூசி முகாம் திடீர் ரத்து! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
133

தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் இன்று தமிழ்நாடு முழுவதும் 50000 பகுதிகளில் 22வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 2வது தவணை தடுப்பூசி செலுத்தாத எல்லோரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தவும் அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தமிழ்நாட்டிலிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கின்ற 1374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3843 நகராட்சி உறுப்பினர்கள், 7621 பேரூராட்சி உறுப்பினர்கள், என்று ஒட்டுமொத்தமாக 12838 பணியிடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே வரும் சனிக்கிழமை 23வது தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.