தமிழக அரசை மதிக்காத தேசிய பசுமை தீர்ப்பாயம்! கடுப்பான தமிழக அரசு!

0
93

மேகதாது அணை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தமிழக நீர்வளத் துறையின் கொள்கை விளக்க குறிப்பு ஒன்றில் கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு முதல்கட்ட பணிகளை மேற்கொள்வதாக வந்த தகவலின் அடிப்படையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருக்கின்றது.அந்தக் கடிதத்தில் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற நிலையில், எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்துமாறு ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையில் ஊடக தகவலின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாய தெற்கு மண்டலம் தன்னிச்சையாக ஒரு வழக்கை எடுத்து விசாரணை செய்தது. ஒரு குழுவும் அமைத்து கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட கூடிய சேதங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மே மாதம் உத்தரவிட்டது.ஆனாலும் கர்நாடக மாநில அரசு சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனுவில் மேகதாது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு அந்த மனுவை முடித்து வைப்பதாக ஜூன் மாதம் 17ஆம் தேதி தெரிவித்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு கொடுக்காமலேயே இந்த வழக்கை முடித்து வைத்து விட்டது. ஆகவே அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.