Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!!

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரிடம் ‘தர்மராஜா திரௌபதி அம்மன்’ கோயிலை திறந்து கோயில் உரிமையை வன்னியர் சமூகத்திற்கு வழங்கிடக்கோரி அஸ்வத்தாமன் மனு அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 2016-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 2022- ஆம் ஆண்டு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் தர்மர் பட்டாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 7 அன்று நடைபெற்ற கோயில் திருவிழாவில் வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமூக மக்களிடையே திரௌபதி அம்மன் கோயில் வழிபாடு தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளதென்று அமைச்சர் பொன்முடி வேறொரு விஷயத்தை திசை திருப்புவதற்காக நடக்காத ஒன்றை நடந்தது போல் வன்னியர் சமூகத்தின் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த வேண்டுமென்று பொய்யான வதந்தியை பரப்பினார்.

இது தொடர்பாக உள்ளூர் மக்கள் கூறியதாவது;

மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. எங்களுக்குள் தீண்டாமை என்ற ஒன்று இல்லை அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கின்றோம்.
இந்நிலையில் அரசியல் கட்சியினர் பெரிதுப்படுத்தியதன் காரணமாகவே இது பிரச்சனையாக மாறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.இதை காரணமாக வைத்துக்கொண்டு வருவாய் கோட்டாட்சியர் திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைத்துள்ளார் என்று புகார் கூறினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தவுள்ளதாக தமிழக பா.ஜ.க. மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

தமிழகம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் குலதெய்வ கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து அபகரித்து வருகின்றது.இந்நிலையில் விழுப்புரம் மாவட்டதில் உள்ள மேல்பாதி கிராமத்தில் வன்னியர் சமூகத்திற்கு சொத்தாக இருக்கும் தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலை அபகரிக்கும் முயற்சியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகின்றது.

இதனை முறியடிக்கும் விதமாக கடந்த ஒன்றரை மாதங்களாக பூட்டப்பட்டிற்கும் கோயிலை திறந்து, திரௌபதி அம்மன் கோயில் மீதான உரிமையை மேல்பாதி கிராமத்தின் வன்னியர் சமூக மக்களுக்கு வழங்க வேண்டுமென்று ஆணையத்திடம் வலியுறுத்தி மனு ஒன்றை அளித்துள்ளோம்.

1993 ல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தாலும் அதற்கான அரசியலமைப்பு அதிகாரம் பிரதமர் மோடி அரசால், சட்ட திருத்தம் 112 மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர் சேகர் பாபு அவர்கள் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்து கோயில் அனைத்தும் தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுமென்று வெளிப்படையாக கூறியுள்ளார்.குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான கோவில்களை அரசு அபகரித்து கொள்ள அது ஒன்றும் அரசினுடைய சொத்து இல்லை.தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வழிபாட்டு உரிமை பாதுகாப்பட வேண்டும்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மேல்பாதி திரௌபதி சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் விரைந்து தலையிட்டு கோயிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளோம்.இந்த விவகாரம் தொடர்பாக இன்று விசாரணை நடத்தப்படுமென்று ஆணையத்தின் தலைவர் உறுதியளித்துள்ளார் என்று அஸ்வத்தாமன் கூறினார்.

Exit mobile version