வாயில் வைத்ததும் கரையும் சர்க்கரை வள்ளி கிழங்கு பாயசம் – அதிக சுவையுடன் செய்வது எப்படி?
நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது.இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம்.இதில் பால் பாயசம்,ஜவ்வரிசி பாயசம்,பாசிப்பயறு பாயசம்,அரிசி பாயசம்,அவல் பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் சர்க்கரை வள்ளி கிழங்கு பாயசம்.இந்த வகை பாயசம் மிகவும் தித்திப்பாகவும்,அதிக சுவையுடனும் இருக்கும்.அதே சமயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்:-
*சர்க்கரை வள்ளி கிழங்கு – 1 அல்லது 2
*பால் -1/2 லிட்டர்
*நெய் – 2 தேக்கரண்டி
*சர்க்கரை – 1/4 கப்
*ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
*குங்குமப்பூ – 6 முதல் 8
*முந்திரி – 10
*உலர் திராட்சை – 8
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 2 சர்க்கரை வள்ளி கிழங்கை போட்டு நன்கு சுத்தப்படுத்தி கொள்ளவும்.பின்னர் அதை நன்கு துருவி 1 கப் அளவு எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி 1 தேக்கரண்டி அளவு ஊற்றி சூடுபடுத்தவும்.பின்னர் அதில் துறவி வைத்துள்ள சர்க்கரை வள்ளி கிழங்கை சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.அதை இறக்கி வைக்கவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 லிட்டர் பால் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.பால் நன்றாக கொதித்து வரும் பொழுது அதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும்.
பின்னர் நெய்யில் வறுத்து வைத்துள்ள சர்க்கரை வள்ளி கிழங்கு துருவலை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.பிறகு சர்க்கரை 1/4 கப் போட்டு கொதிக்க விடவும்.பிறகு வாசனைக்காக ஏலக்காய் பொடி 1 சிட்டிகை அளவு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை சேர்த்து வறுக்கவும்.இதை கொதிக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கு பாயசத்தில் சேர்த்து கலக்கி விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.