Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம்!

ராஜஸ்தான்: பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து ஜெய்ப்பூரில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த இந்து குடும்பம் ஒன்று ராஜஸ்தான் ஜோத்பூர் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளது. பில் சமூகத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் அங்கு குத்தகை முறையில் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை அந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மூலம் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

11 பேர் உயிரிழந்த இடத்தில் மருந்து வாசனை வந்ததால் 11 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இது கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் மட்டும் உயிருடன் இருப்பதாக தெரியவந்தது. அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்குப் பின்னரே அனைவரும் எப்படி உயிரிழந்தனர் என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் தலைப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.

Exit mobile version