மறதி நோயால் அவதிப்படுகிறீர்களா.? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

0
284

மறதி நோயால் அவதிப்படுகிறீர்களா.? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் கோளாறுகளை வெளிப்படுத்தும் அறிகுறிகளின் தொகுப்பே மறதிக்கோளாறு என்று கூறப்படுகிறது. மறதி என்பது ஒரு நோயே அல்ல, என்று சில மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சிந்திக்கும் தன்மை, வேலையில் கவனம் இன்மை, தகவல்களை புரிந்து கொள்வதில் தாமதம் போன்ற பல்வேறு விடயங்கள் மறதியால் நடக்கிறது. இதை எப்படி சரி செய்வது வாருங்கள் பார்ப்போம்.

மறதியை தீர்க்கும் வழிமுறைகள் :

  • எந்த ஒரு செயலையும் அலட்சியத்துடன் செய்யாதீர்கள். எதையுமே ஆர்வத்துடனும், அக்கறையுடனும் செய்யுங்கள். ஆர்வத்தோடு செய்யும் செயல்கள் எப்போதுமே நமக்கு மறப்பதில்லை. உதாரணமாக உங்களுக்கு பிடித்த கிரிக்கெட், கபடி அல்லது வீடியோ கேம் போன்ற விளையாட்டுகளை நீங்கள் ஒருபோதும் மறக்கமாட்டீர்கள்.
  • உங்களுக்கு எது அடிக்கடி மறந்து போகிறதோ அதை தினமும் உங்களின் செயல்பாடுகளில் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள் அல்லது காட்சிபடுத்திக் கொள்ளுங்கள். இதன்மூலம் உங்கள் சிந்தனைத் திறன் மேலோங்கும்.
  • தகவல்களை பரிமாறிக் கொள்வது மற்றும் பயன்படுத்துதல் போன்ற செயல்களால் நமது நினைவாற்றல் அதிகரித்து மறதியை குறைக்கிறது.
  • பதட்டமான மனநிலை, குழப்பமான மனநிலை, மந்தமான மனநிலை இம்மூன்றும் மறதியை மேலும் தூண்டுகிற செயல்களாகும். இதை தவிர்க்க, நடைபயிற்சி அல்லது வீட்டில் இருந்தபடியே சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் இதனால் ஞாபக சக்திகளும் அதிகமாகும்.
  • தினந்தோறும் புதிய செயல்களை கற்றுக் கொள்ள முற்படுங்கள். வயதாகிவிட்டது என்கிற மனநிலையை விட்டொழியுங்கள். கற்றுக் கொள்வதற்கு வயது ஒருபோதும் தடையில்லை, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை புதிதாக தெரிந்துகொள்வதையோ, கற்றுக் கொள்வதையோ வாடிக்கையாக வைத்திருங்கள். நேரம் இருந்தால் தினமும் கற்றுக் கொள்வதை உங்கள் டைரி குறிப்பில் குறித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் நினைவுக் கூர்மை அதிகரிக்கும்.
  • நெகட்டிவ் எண்ணங்களை புறந்தள்ளி, பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். பாசிட்டிவ்வாக இருப்பவர்களை உங்களுடைய நண்பராக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர் திறன் மிகுந்தவர் என்றால், நீங்களும் திறன் மிகுந்தவர்தானே. ( நெகட்டிவ் நண்பர்களை தவிர்ப்பது நல்லது )
  • தினசரி 7 முதல் 8 மணி நேரம் இரவில் நல்ல தூக்கத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற உடல் எடையை குறைப்பது நல்லது.
  • மீன், பாதாம், முந்திரி, பால்வகை உணவு பொருட்கள் உங்கள் நியாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களாகும். தினசரி இந்த உணவுகளை சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு : மறதி என்பது நோயல்ல. மேலே சொன்ன தகவல்களுக்கு உங்கள் மனம் ஒத்துழைத்தால், அனைத்து தகவலும் உங்களது சுண்டு விரலில் மண்டியிடும்.