ஆண்களே.. ஆண்மையை இரட்டிப்பாக்கும் இந்த செடியை பார்த்தால் விட்டுவிடாதீர்கள்!! 

0
620
Want to have sex for a long time? If you follow these tips, you will not be tired!!

கிராம புறங்களில் செழிப்பாக வளரும் பிரண்டை ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை.பிரண்டையின் வேர்,தண்டு,இலை அனைத்தும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது.

பிரண்டையின் காணப்படும் ஊட்டச்சத்துகள்:

1)வைட்டமின் சி மற்றும் ஈ
2)கால்சியம்
3)கெட்டோஸ்டீராய்டு
4)ஃப்ரீடீலின்
5)ரெஸ்வெராட்ரோல்

உடல் சோர்வு நீங்க பிரண்டையை உணவாக எடுத்து வரலாம்.பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்,மூளை நரம்புகள் பலப்படும்.சிறு குழந்தைகளுக்கு பிரண்டையை துவையல் செய்து கொடுத்து வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்களின் மாதவிடாய் கோளாறை சரி செய்ய பிரண்டை உதவுகிறது.உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள பிரண்டை உதவுகிறது.

ஆண்மையை அதிகரிக்க,விந்தணு குறைபாட்டை போக்க பிரண்டை உணவுகளை சாப்பிட்டு வரலாம்.மூல பிரச்சனை இருப்பவர்களுக்கு பிரண்டை சிறந்த தீர்வாகும்.நரம்பு தளர்ச்சி இருப்பவர்கள் பிரண்டை சூப் அல்லது துவையல் செய்து சாப்பிடலாம்.

முதுகு வலி,கழுத்து வலி,இடுப்பு வலியால் அவதியடைந்து வருபவர்கள் பிரண்டையை சூப் குடித்து வந்தால் உரிய பலன் கிடைக்கும்.

பிரண்டை சூப் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை துண்டுகள் – ஒரு கப்
2)தக்காளி – 2(நறுக்கியது)
3)பச்சை மிளகாய் – 1
4)சின்ன வெங்காயம் – 6(நறுக்கியது)
5)இஞ்சி(தோல் நீக்கியது) – 1 துண்டு
6)பூண்டு – 4 பற்கள்
7)பட்டை – 1 துண்டு
8)இலவங்கம் – 2
9)கொத்தமல்லி தழை – சிறிதளவு
10)மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
11)உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு கப் அளவு பிரண்டை துண்டுகள் எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதேபோல் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நறுக்கிய பிரண்டை துண்டுகள்,சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் பச்சை மிளகாய்,பூண்டு,இஞ்சி துண்டு,பட்டை,இலவங்கம்,தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 3 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.

விசில் நின்றதும் மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்தால் பிரண்டை சூப் தயார்.இதை வாரத்திற்கு ஒருமுறையாவது செய்து குடிக்க வேண்டும்.