Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண்களே.. இந்த உணவுகளை சாப்பிட்டால் 50 வயதிலும் விந்தணு தரம் அதிகரிக்கும்!!

தற்பொழுது இளம் வயது ஆணைகளிடையே விந்தணு குறைபாடு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.ஆண்களின் வயது அதிகரிக்கும் பொழுது அவர்களின் விந்தணு தரத்தில் பெருமளவு மாற்றம் உண்டாகிறது.

முன்பெல்லாம் ஆரோக்கிய உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றியதால் ஆண்மை குறைபாடு,மலட்டு தன்மை போன்ற பிரச்சனைகளை ஆண்கள் சந்திக்காமல் இருந்தனர்.ஆனால் தற்பொழுது உணவுப்பழக்க வழக்கம் முற்றிலும் மாறுபட்டுவிட்டதால் பெரும்பாலான ஆண்கள் ஆண்மை குறைபாட்டை சந்திக்கின்றனர்.

30 வயதை கடந்த ஆண்களால் தங்கள் துணையுடன் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடிவதில்லை என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கின்றது.உடல் சோர்வு,மன அழுத்தம்,ஊட்டச்சத்து குறைபாடு,மது மற்றும் குடிப்பழக்கம் போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே ஆண்மை குறைபாட்டை சந்திக்கின்றனர்.

அதேபோல் சிலருக்கு அதிகளவு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும்.அடிக்கடி காபி பருகினால் விந்தணு எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுவிடும்.30 வயதை கடந்த ஆண்கள் தங்கள் உணவுப்பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்தினால் மட்டுமே விந்தணு தரம் உயரும்.

உங்கள் உணவில் மெக்னீசியம்,வைட்டமின் டி,கே,சிங்க்,ஒமேகா 3 கொழுப்பு உள்ளிட்டவை நிறைந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மது மற்றும் புகை பழக்கத்தில் இருந்து முழுமையாக மீண்டால் மட்டுமே நரம்பு தளர்ச்சி,ஆண்மை குறைபாடு போன்றவை ஏற்படாமல் இருக்கும்.பூனைக்காலி,ஓரிதழ் தாமரை,கல்யாண முருங்கை போன்ற மூலிகை பொருட்களை கொண்டு தேநீர் செய்து பருகினால் விந்தணுக்களின் தரம் அதிகரிக்கும்.

பாதாம் பிசின்,முருங்கை பிசினை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் யோகா,தியானம்,உடற்பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்.பதப்படுத்தப்பட்ட உணவுகள்,பிராய்லர் கோழி இறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பாதாம்,பிஸ்தா,முந்திரி போன்ற உலர் பருப்புகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் விந்து எண்ணிக்கை அதிகரிக்கும்.தர்பூசணி பழத்தை சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.தினமும் ஒரு கிளாஸ் பூண்டு பால் பருகி வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Exit mobile version