Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களே உஷார்: கல்யாண ராணியின் கைவரிசை!! ஆசை வலையில் சிக்கிய 15 பேர்!

மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களே உஷார்: கல்யாண ராணியின் கைவரிசை – ஆசை வலையில் சிக்கிய 15 பேர்!

சேலம் மாவட்டம், சாணாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா, இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ரம்யா ஓராண்டுக்கு முன் உயிரிழந்த நிலையில், செந்தில் மறுமணம் செய்ய முடிவு செய்து, ஜோடி ஆப்-ல் பதிவு செய்து பெண் தேடியுள்ளார். அதே ஆப் மூலமாக ஒரு பெண் அறிமுகமாகி தான் கணவரை இழந்தவர், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஆசைவார்த்தை கூறி அவரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்து அந்த பெண் செந்தில் வீட்டில் இருந்த 4½ பவுன் நகை, பணம் மற்றும் செல்போனுடன் மாயமானார். இச்சம்பவம் குறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் செந்திலை ஏமாற்றிய அந்த பெண் ஏற்கனவே கோவையில் தனியார் நிறுவன ஊழியர், தேனி மாவட்டத்தில் சலவை தொழிலாளி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி உள்பட பலரையும் ஏமாற்றி பணம், நகைகளை மோசடி செய்தது தெரிய வந்தது. அப்பெண் 15-க்கும் மேற்பட்டோரை திருமண செய்து ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா என குறித்த போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதுவரை அவரது பெயர், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற எந்த விவரம் தெரியவில்லை. இதையடுத்து தலைமறைவாக உள்ள அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இது குறித்து பாதிக்கப்பட்ட செந்தில், இதுபோல் அந்த பெண் வேறுயாரையும் ஏமாற்றாமல் இருக்க அவரை சட்டத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனை பெற்று தர வேண்டும், இதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என போலிஸாரிடம் கூறினார்.

https://www.maalaimalar.com/news/district/tamil-news-police-investigation-marriage-cheating-case-517839

Exit mobile version