Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கும் ஆண்கள் இந்த சீட்ஸ் சாப்பிட்டாலே போதும்!! டாக்டரே தேவையில்லை!!

இன்று பல ஆண்கள் ஆண்மை குறைபாட்டால் உடலுறவின் போது மனைவியை திருப்திபடுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.ஹார்மோன் பிரச்சனை,குரோமோசோம் மாறுபாடு,பால்வினை நோய்,மது மற்றும் புகைப்பழக்கம்,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் விந்து குறைபாடு,மலட்டு தன்மை,உடல் சோர்வு,நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை தொடர்ச்சியாக செய்து வரவும்.

1)பூசணி விதை – 30 கிராம்
2)முருங்கை விதை- 30 கிராம்
3)பாதாம் பருப்பு – 30 கிராம்
4)முந்திரி பருப்பு – 30 கிராம்
5)பிஸ்தா பருப்பு – 30 கிராம்

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 30 கிராம் பூசணி விதை,30 கிராம் முருங்கை விதை,30 கிராம் பாதாம் பருப்பு,30 கிராம் முந்திரி பருப்பு மற்றும் 30 கிராம் பிஸ்தா பருப்பை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.

பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கிளாஸ் பாலை காய்ச்சி அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு கலந்து குடித்து வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மேலும் சில வீட்டு வைத்தியங்கள்:

1)நிலப்பனங்கிழங்கு பொடி – 100 கிராம்
2)பால் – 1 கிளாஸ்
3)சர்க்கரை – தேவைக்கேற்ப

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் நிலப்பனங்கிழங்கு பொடி தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.

ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி நிலப் பனங்கிழங்கு பொடி மற்றும் சுவைக்காக சர்க்கரை சேர்த்து பருகினால் விந்தணுக்களின் எண்ணிக்கை உயரும்.

1)நீர்முள்ளி விதை பொடி – 50 கிராம்
2)மாதுளை விதை பொடி – 50 கிராம்
3)வெண்ணெய் – சிறிதளவு

ஒரு கிண்ணத்தில் 20 கிராம் நீர்முள்ளி விதை பொடி,20 கிராம் மாதுளை விதை பொடி சேர்த்து கலந்து விடவும்.பிறகு அதில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பேஸ்டாக்கி சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Exit mobile version