மென்சுரல் கப் உபயோகப்படுத்தும் பெண்களின் கவனத்திற்கு!! பேராபத்து எச்சரிக்கை!!
மாதவிடாய் குப்பி எனப்படுவது மாதவிடாய் காலங்களில் வெளியேறும் உதிரங்களை சேகரிப்பதாகும். நாப்கின்களுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். இதை சில பெண்கள் மட்டுமே உபயோகப் படுத்துகிறார்கள். இந்த மாதவிடாய் குப்பியை பயன்படுத்துபவர்களுக்கான கட்டுரை இது.
மாதவிடாய் குப்பி இதை அண்மைக்காலமாக ஒரு சில பெண்கள் அதுவும் அரிதாக உபயோகப் படுத்துகிறார்கள். இது மாதவிடாய் காலங்களில் வெளியாகும் உதிரத்தை சேமித்து வைக்க கூடிய ஒரு கப் போல இருக்கிறது. இந்த குப்பியை பயன்படுத்துவதற்கு முன் சில விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
முதலில் இந்த மாதவிடாய் குப்பி வாங்குகிறீர்கள் என்றால் சரியான அளவில் வாங்க வேண்டும். இது அளவு சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ பயன்படுத்தினால் ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த குப்பியை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் உங்கள் கைகளில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா மற்றும் தொற்றுகள் அந்த குப்பியில் படும் போது அது பிறப்புறுப்பில் தொற்றுகளை ஏற்படுத்தும். அதனால் குப்பியை பயன்படுத்துவதற்கு முன்னும், பின்னும் கைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
சில பெண்கள் சில உயவு பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அதாவது ஒரு சில எண்ணெய், வினிகர், அந்த இடங்களில் ஹைட்ரேசன் ஆக இருக்க லோஷன் போன்றவை உபயோக படுத்துவார்கள். இந்த பொருட்கள் உங்களின் பிறப்புறுப்புகளை சேத படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் இந்த குப்பிகள் நமது பிறப்புறுப்பில் வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
அதனால் இந்த குப்பிகளை தண்ணீரில் நனைத்து பயன்படுத்துவது பாதுகாப்பானது. அதனால் சில வகை தொற்றுகளை தடுக்கலாம். இந்த குப்பியை பொருத்துவதற்கு முன்பாக, அதை பற்றிய தெளிவான வீடியோ அல்லது அனுபவம் வாய்ந்த மருத்துவரிடமோ ஆலோசனை பெற்ற பின்னர் இதை உபயோகப் படுத்தலாம்.
இதை தவறாக பொருத்தும் போது அதற்கான வலி மற்றும் சேதத்தை நாம்தான் அனுபவிக்க வேண்டும். எனவே சரியான ஆலோசனை பெற்று இதை பொருத்தவும். அடுத்ததாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த குப்பியை சுத்தம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் உபயோகப் படுத்தலாம் என்றாலும், அந்த இடத்தில் துர்நாற்றம் வர ஆரம்பிக்கும்.
அதே போல் இதை எடுக்கும் போதும் பாதுகாப்பான முறையில் எடுக்க வேண்டும். பொருத்தும் போது எவ்வளவு பாதுகாப்பாக பொருத்துகிறோமோ, அதே போல் எடுக்கும் போதும் பாதுகாப்பாக எடுக்க வேண்டும்.
மேலும் கர்ப்பபை வாய் புற்றுநோய் இருப்பவர்கள் மற்றும் முறையற்ற மாதவிடாய் இருப்பவர்கள் இந்த மாதவிடாய் குப்பியை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். இந்த குப்பியை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு பயன்படுத்தலாம்.