பெண்களுக்கு மாதம் மாதம் வருகின்ற மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்றுதான். ஆனால் அது இயற்கையான ஒன்றாக இருந்தாலும் கூட சில பெண்களுக்கு சரியான முறையில் இருப்பதில்லை. அதாவது சில பெண்களுக்கு மாத மாதம் சரியாக மாதவிடாய் வராமலும் அவ்வாறு வந்தாலும் சில பெண்களுக்கு மாதத்திற்கு இரண்டு முறை வருவதும் என பெண்களின் உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது மாதவிடாய் ஆன நாட்களில் இருந்து 24 முதல் 35 நாட்களுக்குள் திரும்பவும் மாதவிடாய் ஆகிவிட்டார்கள் என்றால் அது எந்தவித பிரச்சனையும் இல்லை. அதேபோன்று மாதவிடாய் நாட்கள் 3 முதல் 5 நாட்கள் வரை இருந்தால் அதுவும் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து பேடுகளை மாற்றுகிறோம் ரத்த போக்கானது கட்டி கட்டியாக இல்லாமல் நார்மலாக உள்ளது என்றால் அதுவும் எந்த பிரச்சனையும் இல்லை என்று அர்த்தம்.
ஆனால் ஒரு சிலருக்கு இவ்வாறு இல்லாமல் மாதவிடாய் ஆன அடுத்த 10 நாட்கள், 15 நாட்கள் அல்லது 20 நாட்களுக்குள் அடுத்த மாதவிடாய் உருவாகிவிடுகிறது என்பது பிரச்சனைக்குரிய ஒன்று. இத்தகையவர் மருத்துவரை அணுகி பார்ப்பது நல்லது.
ஒரு சில பெண்களுக்கு வயதிற்கு வந்த ஒரு சில மாதங்களுக்கு இந்த ரத்தப்போக்கானது 20 நாட்களுக்குள் ஏற்படலாம். இத்தகைய இளம் வயதினருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டால் அது நார்மல் தான். ஆனாலும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடலில் ரத்தத்தின் அளவு குறைவதால் அந்தப் அந்தப் பெண் மிகவும் வலிமை குறைந்தவளாக மாறிவிடுவாள். எனவே ஒரு இரண்டு முதல் மூன்று மாதங்கள் கவனித்து பார்க்க வேண்டும். எவ்வாறு ரத்தப்போக்கு இருக்கிறது அடிக்கடி மாதவிடாய் ஏற்பட்டாலும் கூட ரத்தப்போக்கு நார்மல் ஆகத்தான் உள்ளது என்றால் இரண்டு மூன்று மாதங்கள் கவனித்து மீண்டும் அந்த பிரச்சனை தொடர்கிறது என்றால் மருத்துவரை அணுகி பார்க்க வேண்டும்.
20 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டால் அவர்களும் ரத்தப்போக்கு எவ்வாறு ஏற்படுகிறது என்று முதலில் கவனிக்க வேண்டும். அதாவது நாப்கின் நனையும் அளவிற்கு ரத்தப்போக்கு உள்ளதா அல்லது ஒரு சில சொட்டுகள் மட்டும் ஏற்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கர்ப்பபையில் கட்டி அல்லது சதை வளர்ப்பு ஏற்பட்டு இருக்கலாம். சரியான மாதவிடாய் ஏற்பட்டாலும் கூட சில நாட்களுக்கு பிறகு சொட்டு சொட்டாக ரத்தப்போக்கு இதனால் ஏற்படலாம். எனவே இத்தகைய பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை அணுகி பார்க்க வேண்டும்.
அதேபோன்று ஒரு சிலருக்கு உடலுறவில் ஈடுபட்ட பின்னர் ரத்தப்போக்கு ஏற்படலாம். அதற்கு காரணம் கர்ப்பப்பை வாயில் புண் ஏற்பட்டிருந்தால் இந்த மாதிரி பிரச்சனைகள் ஏற்படும். இவர்களும் மருத்துவரை அணுகி பார்ப்பது நல்லது.
அதேபோன்று தைராய்டு மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இந்த இர்ரெகுலர் மாதவிடாய் பிரச்சனைகளும் ஏற்படலாம். இதைத் தவிர்த்து ரொம்ப மன அழுத்தத்திற்கு ஆளானாலும் அல்லது புதியதாக உடற்பயிற்சியை மேற்கொள்ளும் பொழுதும் இர்ரெகுலர் மாதவிடாய் ஏற்படலாம். அதேபோன்று மாதவிடாய் முடியும் வயதான 40 முதல் 50 வயது வரை இந்த பிரச்சினை ஏற்படுவது நார்மல் தான். ஆனால் அதனையும் இரண்டு மூன்று மாதங்கள் எவ்வாறு ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதை கவனித்து மருத்துவரை அணுக வேண்டும்.
ஏனென்றால் நமக்கு தெரியாமலேயே கூட கர்ப்பப்பையில் ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். எனவே எந்த வயதினராக இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பார்த்துவிட்டு பிறகு மருத்துவரை அணுகி பார்ப்பது சிறந்தது.
மாதவிடாய் ஒரே மாதத்தில் இரண்டு முறை வருகிறதா!! அப்போ அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்!!

Menstruation twice in one month!! Then find out the reason!!