மனநலம் பாதிக்கப்பட்ட மகன்!! விரக்தியின் உச்சத்தில் தாய் செய்த விபரீத காரியம்!! 

0
114
mentally-challenged-son-the-perverse-thing-done-by-the-mother-at-the-peak-of-desperation

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்!! விரக்தியின் உச்சத்தில் தாய் செய்த விபரீத காரியம்!! 

மனநலம் சரியில்லாத மகனால் தாய் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 65. இவருடைய மனைவி கலைச்செல்வி 60. இவர்களுக்கு மணிகண்டன்  வயது 27, என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் ஆறுமுகம் தனது மனைவி,மற்றும்  மகனுடன் கடந்த 21-ஆம் தேதி இரவு புதுச்சேரியில் இருந்து சென்னை திருவான்மியூருக்கு வந்துள்ளார்.பின்னர் அங்கே கீழ்கட்டளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல திருவான்மியூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து கீழ்க்கட்டளை செல்லும் அரசு பஸ்சில் ஏறியுள்ளனர்.

பஸ்ஸில் ஏறியது முதல்3 பேரும் மிகவும் சோர்வாக இருப்பதை கண்ட கண்டக்டர் ஆறுமுகத்திடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் மூன்று பேரும் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதனால்  அதிர்ச்சி அடைந்த நடத்துனர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார். மேலும் சம்பவ இடத்திற்கு திருவான்மியூர் போலீசாரும் விரைந்து  வந்துள்ளனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மூன்று பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் ஆறுமுகத்தின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் பிறரை அடிப்பது போன்ற செயல்களை செய்து வருவதால் கணவன் மனைவி இருவரும் மனவேதனையில் இருந்துள்ளனர். இதையடுத்து திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் பூச்சி மருந்தை தண்ணீர் பாட்டிலில் கலந்து ஆறுமுகம் அவருடைய மனைவி மற்றும் மகன் மூவரும் குடித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ஆறுமுகம் மற்றும் மணிகண்டன் இருவரும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.