அரசுக்கே ஐடியா கொடுத்த வியாபாரிகள்! சந்தையை விட்டு வெளியேற மாட்டோம்!

0
150
Merchants who gave the idea to the government! We will not leave the market!

அரசுக்கே ஐடியா கொடுத்த வியாபாரிகள்! சந்தையை விட்டு வெளியேற மாட்டோம்!

கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இன்றும் முடிவடையாத நிலையில் பரவி தான் வருகிறது. இத்தொற்றால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. தற்போது கொரோனாவின்  இரண்டாவது அலை உருவாகி வருகிறது. அதனால் அதிக தொற்று பரவும் மகாராஷ்டிரா ,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் தளர்வுகள் கூடிய ஊரடங்கு போட்டுள்ளனர்.

அதேபோல நம் தமிழ்நாட்டில் அதிக மாவட்டங்களில் தொற்று பரவி வருகிறது. அதில் சென்னை ,தஞ்சாவூர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக தொற்று பரவும் மாநிலங்களின் முதல்வர்களை காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் நரேந்திர மோடி அவர்கள் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டது.

அதில் 50 சதவீதம் மட்டுமே மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். அதேபோல மத சார்புடைய கூட்டங்கள் ,திருவிழாக்கள் போன்றவற்றைக்கு தடை விதித்துள்ளனர். உழவர் சந்தைகளில் சில்லரை வியாபாரிகளுக்கும் தடை விதித்துள்ளனர். இந்த உத்தரவானது சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையே பாதிப்பதால் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் போராட்டம் நடத்தினர்.

அதனையடுத்து இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது, திருச்சியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காந்தி சந்தையில் காய்கறிகள் ,பழங்கள், பூக்கடைகள் ,இறைச்சி கடைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த வியாபார கடைகள் இயங்கி வருகின்றன. அரசின் உத்தரவுப்படி சில்லறை வியாபார கடைகளுக்கு தடை விதித்தால் 500க்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

அதனால் காந்தி சாந்தியை விட்டு வெளியே செல்ல மாட்டோம்.காந்தி சந்தையிலேயே இரவு நேரங்களில் மொத்த வியாபாரமும் ,பகல் நேரங்களில்  சில்லரை வியாபாரங்களும் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து முடிவை சொல்வதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதனோடு நாங்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சந்தைகளில் வியாபாரம் செய்வோம் என கேட்டுக்கொண்டார்.