மனதை மயக்கும் வண்ண வண்ண நெசவு சேலைகள்!.. கண்காட்சியில் இடம்பெற்ற பல வகையான அதிநவீன ரேப்பியர் தறிகள்!..

0
344

மனதை மயக்கும் வண்ண வண்ண நெசவு சேலைகள்!.. கண்காட்சியில் இடம்பெற்ற பல வகையான அதிநவீன ரேப்பியர் தறிகள்!..

 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஜவுளி தொழில் பிரதானமாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இந்த ஜவுளி ரகங்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிஜே என்டர்பிரைஸ் சார்பில் அதிநவீன டிஜிட்டல் எலக்ட்ரானிக் ஜக்கார்டு மற்றும் ரேப்பியர் தறி ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.அதன்படி இளம்பிள்ளை மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக இந்த கண்காட்சி நடந்து வந்தது. இக்கண்காட்சியை வங்கி மேலாளர்கள் முதலில் குத்து விளக்கு ஏற்று துவக்கி வைத்தனர். இதில் பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

இதில் சேலை ரகங்கள் ஏற்றார் போல் டிஜிட்டல் முறையில் இயக்கக்கூடிய ரேபியர் தறி மற்றும் எலக்ட்ரானிக் ஜக்கார்டு மிஷின் கண்காட்சியில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ஊர்களில் இருந்து விசைத்தறி உரிமையாளர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு இந்த கண்காட்சியினை பார்வையிட்டு வருகின்றனர்.இந்த கண்காட்சியில் விசைத்தறி உரிமையாளர்கள் மிஷின் வாங்க வங்கி மூலம் கடன் பெறுவதற்காக கண்காட்சி வளாகத்திலேயே தனியார் வங்கிகளும் அரசு வங்கிகளும் முகாமிட்டு தயாராக இருந்தனர். முகாமிற்கான ஏற்பாட்டினை டிஜே என்டர்பிரைஸ் நிர்வாக இயக்குனர் துரைசாமி மற்றும் சுமதி துறை சாமி சுரேந்தர்,ரோஹித் ஆகியோர் செய்து இருந்தனர். இதனால் விசைத்தறி உரிமையாளர்கள் விறுவிறுப்பாக அவற்றையெல்லாம் பார்வையிட்டு வந்தனர்.