Meta company: ஜனவரி மாதம் முதல் செல்போனில் வாட்ஸ்அப் செயலி இயங்காது என மெட்டா நிறுவனம் அறிவிப்பு.
இந்தியாவில் போன் வைத்து இருப்பவர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய செயலிகளில் ஒன்று வாட்ஸ் ஆப் . இந்த செயலியை உலக அளவில் சுமார் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்ஸ் ஆப் பெரும்பாலும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இணையத்தின் வாயிலாக இலவசமாக தொலைபேசி அழைப்புகள், வீடியோ அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆடியோ செய்திகளை நாம் அனுப்ப மிக எளிமையாக பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ் ஆப் முதன்மையான ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியின் தலைமை நிறுவனமான மெட்டா ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இச் செய்தி வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
அதாவது, வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு அந்த செயலில் புதுமையாக செயல்பாடுகளை அறிமுகம் செய்தது மெட்டா நிறுவனம். தொலைபேசி அழைப்பு முதல் பணத் தேவைகளை பரிமாற்றம் செய்து கொள்வது வரை பல வசதிகளை கொண்டு வந்தது. இந்த நிலையில், மெட்டா அறிவித்த அறிவிப்பில் பழைய ஆண்ட்ராய்டு ஓஎஸ் உள்ள செல்போன்களில் ஜனவரி ஒன்று முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது என அறிவித்து இருக்கிறது.
குறிப்பாக, Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini மற்றும் மோடரோலா Moto G 1st Gen போன்ற சாம்சங் மற்றும் ஹச்டிசி, எல்.ஜி, சோனி செல்போன் மாடல்கள் இயங்காது என அறிவித்து இருக்கிறது. இந்த நடவடிக்கை பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்படுகிறது என மெட்டா அறிவித்து இருக்கிறது.