சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி விவரங்கள் பின்வருமாறு:
தற்போது வடகிழக்கு பருவ மழை ஒரு சில இடங்களை பெய்தது வரும் நிலையில் தற்போது அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களுக்கு வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி முதல் குமரிக்கடல் பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் மதியம் 2 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மதியம் 3 மணி வரை மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வட இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளில் நீடிக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தக்கட்டமாக புயலாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருந்தாலும், அதுபற்றி உறுதியாக இன்று தெரிவிக்க முடியும் என வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.