மெத்தனால் Vs எத்தனால்: என்ன வித்தியாசம்? உடலில் உள்ள எந்த உறுப்பை முதலில் பாதிக்கும் தெரியுமா!!

0
213
Methanol Vs Ethanol: What's the Difference? Do you know which organ in the body is affected first!!

மெத்தனால் Vs எத்தனால்: என்ன வித்தியாசம்? உடலில் உள்ள எந்த உறுப்பை முதலில் பாதிக்கும் தெரியுமா!!

மெத்தனால் என்றால் முதலில் நினைவிற்கு நிகழ்வாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு தான்.55 பேரை பலி கொண்ட இந்த மெத்தனால் சில நிமிடங்களில் உயிரை பறிக்கும் நச்சுத் தன்மை கொண்ட வேதிப்பொருளாகும்.மெத்தில் ஆல்ஹகால் என்று அழைக்கப்படும் மெத்தனால் தொழிற்சாலைகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

மெத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

இயற்கை எரிவாயு,நிலக்கரி உற்பத்தி,சுத்திகரிப்பு நிலைய கழிவுநீர்,கெட்டுப்போன கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்டவைகளில் இருந்து மெத்தனால் தயாரிக்கப்படுகிறது.மெத்தனால் எளிதில் தீ பற்றக் கூடியத் தன்மை கொண்டது.

இந்த மெத்தனாலில் 90% ஆல்ஹகால் இருப்பதினால் சட்ட விரோதமாக சிலர் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு மெத்தனால் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சாராயத்தை அருந்தினால் அவை கண் எரிச்சல்,கண் பார்வை பறிபோதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.மேலும் உணவுக் குழாய் மற்றும் வயிற்றுப் பகுதி முழுமையாக சேதமடைந்து உயிரிழப்பு ஏற்படும்.

நச்சுத்தன்மை கொண்ட மெத்தனால் தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக்,பெயிண்ட்,செயற்கை நூலிழைகள்,வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்டவைகள் தயாரிக்க பயன்படுகிறது.இவை அதிக நச்சுத்தன்மை கொண்டவை என்பதால் அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.

எத்தனால் எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது?

எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்ஹகால் பழச்சாறுகளை நொதிக்க வைப்பதன் மூலம் கிடைக்கிறது.குறிப்பாக கரும்பு,கோதுமை,கம்பு,பார்லி,சோளம் போன்ற பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.இவை மதுபானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.எத்தனாலால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவு.இதை தயாரிக்க அரசே அனுமதி அளித்துள்ளது.