Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீபாவளிக்காக நேரத்தை அதிகரித்த மெட்ரோ! மகிழ்ச்சியில் மக்கள்!

Metro increases time for Deepavali! Happy people!

Metro increases time for Deepavali! Happy people!

தீபாவளிக்காக நேரத்தை அதிகரித்த மெட்ரோ! மகிழ்ச்சியில் மக்கள்!

பொதுவாகவே தீபாவளி பண்டிகையை எல்லோரும் அவர்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாடத்தான் விரும்புவார்கள். அந்தவகையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பலர் அவர்களுக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் தான். கடந்த கொரோனா காலத்தில் பல திட்டங்கள் ரத்தானது. அதில் மெட்ரோவும் ஒன்று. அதில் பல நேரக்கட்டுப்பாடுகள் அறிவித்து பயணங்களை குறைத்தது.
இதுபோன்று, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை மற்றும் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்து உள்ளது. இதுபற்றி இன்று மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளியை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதியை பெருக்க சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் நாளை மற்றும் நாளை மறுநாள் மட்டும் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.
நெரிசல்மிகு நேரமான மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் ரயில்கள் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்கள் மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு உள்ளது.
மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.  இந்த மெட்ரோ ரெயில் நீட்டிப்பு சேவைகள் நாளை 02.11.2021 மற்றும் நாளை மறுநாள் 03.11.2021 மட்டுமே என்று கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Exit mobile version