Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காத்திருக்காமல் உடனே மெட்ரோ ரெயில் பயணத்துக்கு டிக்கெட் எடுக்க புதிய வழி

Metro Rail Ticket Booking by Using Smart Watch-News4 Tamil Latest Online Tamil News Today

Metro Rail Ticket Booking by Using Smart Watch-News4 Tamil Latest Online Tamil News Today

காத்திருக்காமல் உடனே மெட்ரோ ரெயில் பயணத்துக்கு டிக்கெட் எடுக்க புதிய வழி

நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மெட்ரோ ரெயில் பயணத்துக்கான டிக்கெட் எடுக்கும் முறையை மாற்றி நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை பயணம் செய்யும் முறையை மெட்ரோ நிர்வாகம் விரைவில் அறிமுகபடுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட கைக்கடிகாரத்தை ரூ.1,000 செலுத்தி பெற்றுக் கொண்டு மெட்ரோ ரயிலில் எளிதில் பயணம் செய்யலாம்.

சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் வரை பயணிகள் சேவை நடந்து வருகிறது. தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

‘டைட்டன்’ வாட்ச் நிறுவனம் புதிய ‘சிப்’ பொருத்திய இந்த கைக்கடிகாரத்தை தயாரிக்கிறது. இதன் மூலம் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் டிக்கெட் எடுக்காமல் எளிதில் செல்ல முடியும்.

நுழைவு பாதையில் உள்ள இயந்திரத்தில் இந்த கைக்கடிகாரத்தை காண்பித்தால் கதவு தானாக திறக்கும். பின்னர் எளிதில் உள்ளே செல்ல முடியும். டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இதற்காக ரூ. 1,000 பணத்தை செலுத்தி கைக்கடிகாரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக விரைவில் ‘ஸ்மார்ட் வாட்ச்’ அறிமுகம் செய்யப்படும். ‘டைட்டன்’ நிறுவனமானது இந்த நவீன ‘சிப்’ பொருத்திய கைக்கடிகாரத்தை தயாரித்து வழங்க உள்ளது.

மெட்ரோ நிலையத்தில் ரூ. 1,000 செலுத்தி பயணிகள் இந்த கைக்கடிகாரத்தை பெற்றுக் கொள்ளளாம்.

இந்த கடிகாரத்தை மெட்ரோ பயணிகள் கையில் அணிந்து கொண்டு மெட்ரோ நுழைவு பாதையில் சென்றால் கதவு தானாக திறக்கும். இதனையடுத்து பயணிகள் விரைவாக மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல முடியும். மேலும் ரூ. 1,000 முதல் ரூ, 1,500 வரை பல்வேறு மாடல்களில் இந்த கடிகாரங்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version