Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாட்ஸ்ஆப் முலம் மெட்ரோ டிக்கெட்! புதிய வசதியை அறிமுகப்படுத்தியது சென்னை மெட்ரோ!!

வாட்ஸ்ஆப் முலம் மெட்ரோ டிக்கெட்! புதிய வசதியை அறிமுகப்படுத்தியது சென்னை மெட்ரோ!
வாட்ஸ் ஆப் மூலமாக மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை மக்களுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக டிக்கெட் பெறும் மக்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இன்று வாட்ஸ்ஆப் மூலமாக மெட்ரோ இரயில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பெற்றுக் கொள்ள புதிய வசதி ஏற்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து வாட்ஸ்ஆப் மூலமாக டிக்கெட் பெறுவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வாட்ஸ்ஆப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய விரும்புவர்கள் 8300086000 எண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில் Hi என்று குறுந்தகவல் அனுப்பினால் டிக்கெட் பெறுவதற்கான வழிமுறைகள் வரும். அதை பின்பற்றி சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். வாட்ஸ்ஆப் மூலமாக டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Exit mobile version