Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையில் நாளை முதல் அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!!

#image_title

சென்னையில் நாளை முதல் அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!!

சென்னையில் பல்வேறு விழிப்புணர்வுகளை வலியுறுத்தி அவ்வப்போது மாரத்தான் ஓட்டம் நடைபெற்று வரும். அவ்வகையில் நாளை  மாரத்தான் ஓட்டம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பு சேவையை அறிவித்து  அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் சென்னை மாவட்டத்தில்   மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு மெட்ரோ  ரயில் சேவைகள் நாளை அதிகாலை 3:00 மணி முதல் இயக்கப்பட உள்ளன. சென்னை மாரத்தான் ஓட்டம் நாளை அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி மாரத்தான் பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள வகையில் மற்றும் அவர்கள் இடையூறு இன்றி எளிய பயணத்தை அனுபவிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிறுவனம் 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக விசேஷ காலங்கள், கிரிக்கெட் போட்டிகள் முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட நாட்களில் சென்னை மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக இயக்கப்பட்டு வருவது வழக்கம். இதன் அடிப்படையில் மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து நிறுவனத்தின் சிறப்பு கியூஆர் கோடு பதியப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி நாளை மட்டும் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம்.

மேலும் பங்கேற்பாளர்கள் அன்று மட்டும் வாகன நிறுத்தத்தில் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் எனும் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version