ஒரு குட் நியூஸ்., விடுமுறை நாட்களில் இனி எப்போதும் இது உண்டு!! நிர்வாகம் சார்பாக அறிவிப்பு!!

0
179

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிக கடுமையாக பரவி வந்தது. இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த உடன் பல விதமாக ஊரடங்குகள் போடப்பட்டன. கொரோனா இரண்டாவது அலை வந்த பின் முழு ஊரடங்கு போடப்பட்டது. அதன் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து உள்ளது. மேலும், இதனால் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, அந்த வகையில் மெட்ரோ ரயில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும், இதன் காரணத்தால் பணிக்கு செல்பவர்கள் உட்பட அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றின் விதி முறைகளை கடைப்பிடித்து பயணிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் நாளை முதல் ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் ஆனது இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் கொரோனா நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பத்து நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அனைவரும் ஞாயிறு மற்றும் பொது விடுமுறையை செலவிடுவதற்கு ஏற்றது போல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த தளர்வை போல திரையரங்குகள் மற்றும் பள்ளி,கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது வெளியிடப்படும் என்று மக்கள் கேட்டு வருகிகின்றனர். விரைவில் திரையரங்கு மற்றும் பள்ளி திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.