மெட்டி ஒலி சீரியல் நடிகை விஜி திடீர் மரணம்..ரசிகர்கள் அதிர்ச்சி.!!

0
134

மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமான நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை உமா மகேஸ்வரி. இவர் இந்த சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இந்த சீரியலில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார். மெட்டி ஒலி சீரியலுக்கு இன்றும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் இந்த சீரியலைத் தொடர்ந்து வெற்றிக்கொடிகட்டு, உன்னை நினைத்து, அல்லி அர்ஜுனா உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அந்நிலையில் சென்னை காட்டுப்பாக்கத்தில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.