கடல் போல் காட்சி தரும் மேட்டூர் அணை! அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு!

0
141

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு ஒகேனக்கல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகின்றது.

கடந்த சில தினங்களாக ஒகேனக்கல் காவிரியில் 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த சூழ்நிலையில், மெல்ல மெல்ல குறைந்து தற்சமயம் 30 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டு இருக்கிறது இருந்தாலும் சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி, என்று அனைத்து அருவிகளையும் முழு கடித்தபடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு அப்படியே வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து 120.10 அடியாக நீடித்து வருகிறது.

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்சமயம் நீர் 193.61 டிஎம்சி ஆக இருக்கிறது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி தருகிறது. மேட்டூர் அணையின் இடது கரையில் இருக்கின்ற வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பணியாளர்களும், 24 மணி நேரமும் நீர் வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.