Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

படம் முடிந்தும் 5 நிமிடங்கள் அப்படியே உறைந்து போன MGR! என்ன படம் தெரியுமா?

#image_title

சிவாசிக்கு நீர் எதிரியை போட்டியாளர் என்றால் அது எம்ஜிஆர் தான் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து அந்த காலத்தில் மக்களை மகிழ்வு படுத்தினார்கள் என்று சொன்னால் மிகை ஆகாது.

பராசக்தியில் தொடங்கிய அவரது கலைப்பயணம் இன்றும் அவர் ஒரு நடிகர் அவர் மட்டும்தான் நடிகன் என்று போற்றும் அளவிற்கு நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவரது நடிப்பு எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கள்.

அப்படி சக போட்டியாளரான நடிகரையே மிரள வைக்கும் பாத்திரங்களை ஏற்று, உண்மையானவர்களே தோற்றுப் போகும் அளவிற்கு அவரது கதாபாத்திரங்களை செய்யும் சிவாஜியை மிகவும் பாராட்டிய எம்ஜிஆர் சொன்ன இந்த வார்த்தை தான் இன்றும் பேசும் படி உள்ளது.

83ம் ஆண்டு கலைஞானம் தயாரிப்பில், கே.சங்கர் இயக்கத்தில், ‘மிருதங்க சக்கரவர்த்தி’ வெளியானது. படத்தின் தலைப்பே, சிவாஜியின் கேரக்டரைச் சொல்லிவிடும். மிருதங்க வித்வானாக, மிருதங்க சக்கரவர்த்தியாக நடித்திருந்தார்.

அப்பொழுது எம்.ஜி.ஆர் நோய்க்கு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வந்த MGR, இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கலைஞானம் அவரிடம் கேட்டிருக்கிறார். இப்பொழுது எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கின்றார்.

இந்தப் படத்தை இவருக்கு மட்டும் ஒரு தியேட்டரில் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. கலைஞானம் எம்ஜிஆர் ஜானகி அனைவரும் இந்த படத்தை பார்க்கிறார்கள்.

கணேசனின் நடிப்பையும் திறமையும் அவரது உடல் மொழியையும் பார்த்து அப்படியே வியந்து போகிறார் எம்ஜிஆர்.

படம் பார்த்து முடித்துவிட்டு அனைவரும் எழுகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் மட்டும் எழவே இல்லையாம்.

ஜானகி அவர்கள் எம்ஜிஆரை எழுப்புகிறாராம் ஆனால் எம்ஜிஆர் கன்னத்தில் கைவைத்தபடி ஐந்து நிமிடம் அப்படியே உறைந்து போய்விட்டாராம்.

ஐந்து நிமிடம் கழித்து எழுந்து கலைஞானம் அவர்களிடம் சொல்கிறாராம் இந்த உலகத்தில் ஒரு நடிகன் இருக்கிறான் என்றால் அது சிவாஜிதான். என்று போய் அவரிடம் சொல் என்று மிகவும் பாராட்டினார் MGR.

Exit mobile version