Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமைச்சருக்கு ஆதரவாக களமிறங்கிய ‘எம்.ஜி.அர்’ !!!!!!!

Election campaign

Election campaign

அமைச்சருக்கு ஆதரவாக களமிறங்கிய ‘எம்.ஜி.அர்’ !!!!!!!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் நடைபெற்றுவருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையில் வாக்குகளை சேகரித்து பொதுமக்களை கவர்ந்து  வருகிறார்கள். இந்நிலையில் மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான  பென்ஜமின். வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல்  தொகுதியில் அதிமுக சார்பில்  வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்நிலையில் அமைச்சர் பென்ஜமின் பிரச்சாரத்தின் போது எம்.ஜி.ஆர் போல வேடமணிந்து வந்த  ஒருவர் அவருக்கு ஆதரவு தெரிவித்தார். பின்பு அமைச்சர் பென்ஜமினுடன் களமிறங்கி  பிரச்சாரதில் ஈடுபட்டார் மற்றும் அமைச்சர் பென்ஜமினுக்கு ஒரு ஆள் அடி உயரத்தில் மாலை அணிவித்தனர். பிறகு வீரவாள் வளங்கியும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தர்.

மேலும் அவர் பள்ளி மாணவர்களுடன் விதவிதமாக ‘செல்ஃபி’ எடுத்த மாணவர்களை காவர்ந்து ஓட்டுகளை சேகரித்தார் மற்றும் அருகில் இருந்த கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அமைச்சர் பென்ஜமின் அங்கிருக்கும் வாக்காளர்கள் வீட்டில் தேனீர் அருந்தி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். மேலும் அவர் இருசக்கர வாகனத்தில் சென்று இளைஞர்களின் வாக்குகளை நூதன முறையில் சேகரித்தார்.

Exit mobile version