Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோபத்தில் கண்ணதாசன் இருந்த அறையை பூட்டிய எம்.ஜி.ஆர். : நடந்தது என்ன?

கோபத்தில் கண்ணதாசன் இருந்த அறையை பூட்டிய எம்.ஜி.ஆர். : நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில், பிரபல பாடலாசிரியரும், கவிஞராகவும் வலம் வந்தவர் கண்ணதாசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை இவர் எழுதியுள்ளார். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தவர் கண்ணதாசன். 1980ம் ஆண்டே இவர் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். எத்தனை வருடங்கள் கழிந்தாலும் இன்று வரை இவருடைய பாடல்கள் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

1950-1960ம் ஆண்டுகளில் கொடி கட்டி பறந்த எம்.ஜி.ஆர், சிவாஜி உள்பட பல நடிகர்களுக்கும் இவர் பல பாடல்களை எழுதினார்.

எம்.ஜி.ஆரும், கண்ணதாசனும் நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர். இவர்கள் இருவரும் பல படங்களில் ஒன்றாக பணியாற்றியும் உள்ளனர்.

இதற்கிடையில் சிவாஜி பல பாடல்களை எழுதியதால் எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுத அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இதனால், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற சில பாடலாசிரியர்கள் எம்.ஜி.ஆருக்கு பாடல்களை எழுதி கொடுத்தனர்.

ஒரு முறை எம்.ஜி.ஆர். நடிப்பில்  ‘தாய் சொல்லை தட்டாதே’ படம் உருவானது. அப்போது, கண்ணதாசனை சந்தித்த எம்ஜிஆர் இந்தப் படத்திற்கு நீ பாடல் எழுதாமல் வெளியே எங்கேயும் உன்னால் நகர முடியாது. இரு உன்னை நான் என்ன செய்கிறேன் பார் என்று சிரித்துக் கொண்டு கண்ணதாசன் இருந்த அறைக்கதவை மூடிவிட்டு பூட்டு போட்டுவிட்டார்.

அந்த நேரத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் தான் ‘சிரித்து சிரித்து என்னை சிறையில் வைத்தாய்’ என்ற பாடல். இணைபிரியா நட்பாக பழகி வந்த இருவரும், ஒரு கட்டத்தில் அரசியல் ரீதியான கருத்து வேறுபாட்டில் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இதனையடுத்து, எம்.ஜி.ஆருக்கு, கவிஞர் வாலி பல பாடல்களை எழுதி எம்.ஜி.ஆரை தன் பாசத்தால் கட்டிப்போட்டார். ஆனாலும்,  எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனபிறகு, கண்ணதாசனை தமிழக அரசின் அரசவை கவிஞராகவே நியமித்தார்.

Exit mobile version