Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எம் ஜி ஆர் நடிக்கும் பொன்னியின் செல்வன் ; கலக்கலானப் பாடல் இதோ !

எம்.ஜி.ஆர் உருவத்தை அனிமேஷனில் உருவாக்கி வந்தியத்தேவன்: பொன்னியின் செல்வன் பாகம் 1’ எனும் அனிமேஷன் படம் உருவாகியுள்ளது.

கல்கி எழுதிய 1500 பக்கங்கள் கொண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்.ஜி.ஆர் முயற்சி செய்தார். அந்த படத்துக்கான திரைக்கதையை இயக்குனர் மகேந்திரன் எழுதிக் கொடுத்தார். படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் என்ன காரணத்தினாலோ படப்பிடிப்பு நிகழவில்லை.

பின்பு ஒருமுறை கமல்ஹாசனை வைத்து அந்த படத்தை தயாரிக்க ஆசைப்பட்டார் எம்.ஜ்.ஆர். ஆனால் அதுவும் கைகூடவில்லை. இதனையடுத்து இப்போது மணிரத்னம் அந்த முயற்சியில் வெற்றி கண்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார். மிகப்பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் எம்.ஜி.ஆரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக சனீஷ்வர் அனிமேஷன்ஸ் என்ற அனிமேஷன் நிறுவனம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தோற்றத்தை அனிமேஷனில் வரைந்து வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1 என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளன்று படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. பெரியார் குத்து’ பாடல் புகழ் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்க மதன் கார்க்கி இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் என ஆரம்பிக்கும் அந்த பாடல் பழைய எம்.ஜி.ஆர் ஓபனிங் பாடலான நான ஆணையிட்டால் பாடலை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Exit mobile version