தன்னுடைய படத்தில் வேறு ஒருவரை நடிக்க வைக்க மறுத்த எம்ஜிஆர்!! பாக்கியராஜனுடைய கதையால் மாறிய மனம்!!

0
106

எம்ஜிஆர் அவர்கள் நடித்த திரைப்படம் ஒன்று பாதியில் நின்ற நிலையில், அதற்கான திரைகதை வசனத்தை எழுதி தானே நடித்த வெற்றி படமாக மாற்றியவர் தான் இயக்குனர் மற்றும் நடிகராக பாக்யராஜ் அவர்கள்.

 

எம்ஜிஆர் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம் தான் ” அண்ணா நீ என் தெய்வம் “. இத்திரைப்படத்தில் எம்ஜிஆர், லதா, சங்கீதா மற்றும் நம்பியார் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஆனது பாதி சூட்டிங் நிறைவடைந்த நிலையில், எம்ஜிஆர் அவர்கள் அப்பொழுது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார்.

 

அதன் காரணமாக இத்திரைப்படத்தை முழுமையாக நடித்த முடிக்கவில்லை. குறிப்பாக இந்த திரைப்படத்திற்கு 10 முதல் 12 லட்சம் வரை செலவு செய்த நிலையில் இப்படத்தினை வீணாக்க விரும்பாமல் தயாரிப்பாளர் பல தயாரிப்பாளர் பல இயக்குனர்களிடம் இதைக் குறித்து தெரிவித்திருக்கிறார். இவ்வாறு தெரிவித்தது பாக்யராஜ் அவர்களுக்கு தெரியவே, அவர் இப்படத்திற்கான திரை கதையை எழுதி வந்து இதற்கு நல்ல ஆக்சன் ஹீரோவாக நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்றும் தயாரிப்பாளரிடம் தெரிவித்திருக்கிறார்.

 

இதனை தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரிடம் கூற, எம்ஜிஆர் அவர்கள் உடனே பாக்கியராஜிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அடுத்த நாள் எம்ஜிஆரை சந்தித்த பாக்யராஜிடம் எம்ஜிஆர் அவர்கள் ஏன் மற்றொரு அடுத்த நாள் எம்ஜிஆரை சந்தித்த பாக்யராஜிடம் எம்ஜிஆர் அவர்கள் ஏன் வேறொரு ஹீரோவை நடிக்க வைக்க சொன்னாய் என்று கேட்டுள்ளார். அதற்காக இப்படத்தில் நல்ல ஆக்சன் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறினேன் எனக் கூற, எம்ஜிஆர் அவர்களோ நடித்தால் நீதான் நடிக்க வேண்டும் இல்லை என்றால் இப்படத்தினை நான் குப்பையில் போட்டு விடுகிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் தான் நடிப்பதாக ஒப்புக்கொண்ட பாக்யராஜ் அவர்கள் இத்திரைப்படத்தினை இயக்கி நடித்து மிகப்பெரிய வெற்றிக்கு கொண்டு சென்று விட்டார்.

 

குறிப்பாக இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கண்ட நிலையில் ஹிந்தி கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.