கொரோனா தாக்கத்தால் மக்கள் எதுவுமின்றி அவதிக்குள்ளாகிய நிலையில் தங்கம் விலை மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது.அதிகபட்சமாக தங்கத்தின் விலை ரூபாய் 43 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்வுக்குவரும் நிலையில் தற்போது தொழிற்சாலைகள்,பெரும்நிறுவனங்கள் தங்களது தொழில்களை தொடங்கியுள்ளன.இதுமட்டுமின்றி தற்போது தங்கசுரங்கத்திலும் வேலை படிப்படியாக தொடங்கியுள்ளது.இதன் காரணமாக,வேகமாக உயர்ந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றது.அதன் தொடர்ச்சியாக நேற்று தங்கத்தின் விலை ரூபாய். 984 குறைந்து விற்கப்பட்டது.
தற்பொழுது இன்று ஒரே நாளில் சவரன் ரூபாய்.1832 குறைத்து விற்கப்படுகிறது.
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய்.229 குறைந்து ரூ.5,013 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,832 குறைந்து ரூபாய்.40,104 ஆகவும் விற்கப்படுகிறது.24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய்.52,750 ஆகவும் சர்வதேச சந்தையில் விற்கப்படுகிறது.
கடந்த 3 தினங்களில் தங்கத்தின் விலை மட்டும் ரூபாய்.2,816 குறைந்து காணப்படுகிறது.இதைப்போன்று வெள்ளி விலையும் குறைந்து கொண்டேவருகின்றது. ஒரு கிராம் ரூபாய்.12.30 குறைந்து ரூ.7,050 ருபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் .12.30 குறைந்து ரூ.70,500 விற்பனை செய்யப்படுகிறது.