Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம்! பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

கடந்த 2014ஆம் ஆண்டு மோடி பிரதமரான பிறகு பாஜக அசுர வளர்ச்சியைக் கண்டு வருகிறது.அவர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது சற்றேறக்குறைய இந்தியாவில் சுமார் 75 சதவீத மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது.

இருப்பினும் தமிழகத்தில் அந்த கட்சி இன்றளவும் பெரிதாக சோபிக்கவில்லைஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பிறகு பாஜக தமிழகத்தில் பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து அதற்கான முயற்சிகளையும் செய்து வந்தார்.இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் பாஜக கடந்த 25 வருடங்களுக்கு பிறகு 4 சட்டசபை உறுப்பினர்களை பெற்றது.

இந்த நிலையில், சென்னை டிநகரில் இறக்கின்ற பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. இதன் காரணமாக, அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முன்னதாக பாஜக தலைமை அலுவலகத்தில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்த விதமான சேதமும் உண்டாகவில்லை. மது பாட்டிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version