ஒற்றைத் தலைவலி பிரச்சனையா? கொத்தமல்லி டீ தயார் செஞ்சு குடிங்க! 

0
247
Migraine problem? Prepare coriander tea and drink it!
ஒற்றைத் தலைவலி பிரச்சனையா? கொத்தமல்லி டீ தயார் செஞ்சு குடிங்க!
ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் அனைவரும் கொத்தமல்லியின் விதைகள் மல்லியை பயன்படுத்தி டீ தயார் செய்து குடித்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும். இந்த பதிவில் ஒற்றை தலைவலியை நீக்கும் மல்லி டீ எவ்வாறு தயார் செய்வது, மல்லி டீயின் மற்ற நன்மைகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கொத்தமல்லியில் உடலுக்குத் தேவையான பல நன்மைகள் இருக்கின்றது. இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் இருக்கின்றது. கொத்தமல்லியை பயன்படுத்தி டீ தயார் செய்து குடிப்பதால் நமக்கு பல உடல்நலப் பிரச்சனைகள் குணமாகின்றது. கொத்தமல்லி டீ தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கொத்தமல்லி டீ தயார் செய்யும் முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொண்டு அதில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் கொதித்த பின்னர் இதில் இரண்டு தேக்கரண்டி அளவு மல்லி விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு கொதிக்க விட வேண்டும். இதை இரண்டு நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும்.
இரண்டு நிமிடங்கள் கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விட்டு பத்து நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பத்து நிமிடங்கள் கழிந்து இதை வடிகட்டி அப்படியே குடிக்கலாம்.
கொத்தமல்லி டீயால் கிடைக்கும் நன்மைகள்:
* கொத்தமல்லி டீயை குடிப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுகின்றது.
* கொத்தமல்லி டீ குடிப்பதால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகின்றது.
* கொத்தமல்லி டீ குடிப்பதால் செரிமானப் பிரச்சனை குணமடைகின்றது.
* கொத்தமல்லி டீயை குடிப்பதால் ஒற்றைத் தலைவலி விரைவில் குணமடைகின்றது.
* கொத்தமல்லி டீயை குடிப்பதால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியாகி விடுகின்றது.
* கொத்தமல்லி டீயை குடிப்பதால் மூட்டுவலி சரியாகின்றது. மேலும் பலவிதமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொத்தமல்லி டீயில் இருப்பதால் வாத நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக இருக்கின்றது.
* கொத்தமல்லி டீயை குடிப்பதால் வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகின்றநு.