Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மியான்மரில் ராணுவம் ஆக்கிரமிப்பு – எதிர்த்துப் போராடுபவர்களை போலீஸ் தடாலடி!

மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருவதை எதிர்த்து பலரும் போராடி வருகிறார்கள். அரசியல் தலைவர்களும் முழு முயற்சியுடன் போராடி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். 

தற்போது ஆங்சாங்  சூகி அவர்களையும் கைது செய்துள்ளனர். “ஆங் சாங் சூகி” அவர்கள் மியான்மர் மக்கள் நலனுக்காக மற்றும் அவர்களின் அடிப்படை தேவைக்காக ஏறக்குறைய 21 வருடங்கள் வீட்டு சிறையில் இருந்து போராடியவர். ஒரு பெண்மணியாக தனியாய் அவர் வீட்டுச் சிறையில் இருந்தவர். 

அவர் “அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்” என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்நாட்டு பல அரசு பதவிகளில் இடம் பெற்றுள்ளார். அவரை ராணுவ அரசு தற்போது சிறை பிடித்துள்ளது. இதனை எதிர்த்து ஒரு வார காலமாக அந்நாட்டு மக்கள் போராடி வருகிறார்கள். இதனை தடுப்பதற்காக மனதில் ஈவுஇரக்கமின்றி, மாணவர்களையும் மற்றும் போராடி வரும் மக்களை அந்நாட்டு ராணுவ அரசு போலீஸ் அதிகாரிகளுடன் தடாலடி நடத்தியுள்ளது. 

அவர்களை ஓட ஓட அடித்து  விரட்டிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்ப்பவர்கள் அனைவரின் நெஞ்சையும் திகைக்க வைக்கிறது. மியான்மர் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைத்து நாட்டு மக்களின் விருப்பமாகும்.

Exit mobile version