பால் விலை அதிரடி உயர்வு? அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

0
290

பால் விலை அதிரடி உயர்வு? அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலையில் மூன்று ரூபாயாக குறைத்தனர்.ஆனால் பாலினால் செய்யப்படும் பொருட்களின் விலைகள் அனைத்தும் உயர்ந்தது.அதனையடுத்து பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு பால் கொள்ளுமுதல் விலையை உயர்த்தி உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் பால் கொள்முதல் விலை ரூ 32 ல்லிருந்து 35 ஆக உயர்த்தினர்.அதனையடுத்து எருமைப்பால் விலையை 41 லிருந்து 45ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஆவின் நிறுவங்களால் விற்கப்படும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை 52 ஆக இருந்து தற்போது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த திடீர் பால் விலை உயர்வினால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பட்டைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது கேராளாவில் அரசு துறை நிறுவனமான மில்மா மூலம் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.பால் உற்பத்தியாளர்கள் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை அனைத்தும் நியாயமாக இருக்கின்றத என்பதனை நிர்ணயம் செய்ய குழு ஓன்று அமைக்கப்பட்டது.அந்த குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.அதில் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ 7 முதல் ரூ 8 வரை உயர்த்தலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கோரிக்கை மற்றும் குழு அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் முடிவு செய்ய உள்ளனர்.அதனை தொடர்ந்து இன்று தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கேரளாவில் பால் விலையை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.அதன் பிறகு தான் பால் விலையில் லிட்டருக்கு எத்தனை ரூபாய்  உயரும் என்று தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.