பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரிப்பு!!! அதிரடியாக உயர்த்திய ஆவின் நிறுவனம்!!!
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் பாடல்களில் ஒன்றான ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரித்து ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிர்வாகம் சார்பாக பால் பாக்கெட் விற்பனை நடைபெற்று வருகின்றது. இதில் இரண்டு முறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 37 ரூபாய்க்கும், ஒரு முறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 40 ரூபாய்க்கும் நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 44 ரூபாய்க்கும் நிறை கொழுப்பு நிறைந்த பால் லிட்டருக்கு 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆவின் நிறுவனம் இதில் கால் லிட்டர், அரை லிட்டர், ஒரு லிட்டர் என்று மூன்று விதமான அளவுகளில் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்து வருகின்றது. இந்த விலை மாதாந்திர ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வேறுபடும்.
இந்த பால் பாக்கெட்டுகளில் கால் லிட்டர் பால் பாக்கெட் 11.25 ரூபாய்க்கு தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆகவே ஒரு லிட்டர் பால் பாக்கெட் விலை 45 ரூபாய் ஆகும். ஆனால் தற்பொழுது 200 மிலி அளவு கொண்ட பால் பாக்கெட் 10 ரூபாய்க்கு வந்துள்ளது.
ஆகவே 200 மிலி அளவு கொண்ட பால் பாக்கெட் 1 லிட்டர் என்னும் பொழுது அதன் விலை 50 ரூபாய் ஆகின்றது. ஆகவே ஆவின் நிறுவனம் பால் பாக்கெட்டில் விலை மற்றும் அளவு குறைப்பது போல டெக்னிக்கலாக இந்த விலையேற்றத்தை செய்துள்ளது.
இது குறித்து பால் முகவர்கள் “பாலின் விலையை நேரடியாக உயர்த்துவதற்கு ஆவின் நிறுவனத்திற்கு அரசு அதிகாரம் வழங்கவில்லை. ஆனால் விற்பனை விலையை அதிகரிக்கவும் அதன் மூலமாக கொள்முதல் விலை உயர்வு நிர்வாக செலவுகளை மேற்கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த வசதியை சாதகமாக பயன்படுத்திய அதிகாரிகள் பல்வேறு வகைகளில் ஆவின் பொருட்களின் விலையை அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் லிட்டருக்கு பால் பாக்கெட் விலையை டெக்னிக்கலாக 5 ரூபாய் அதிகரித்துள்ளனர்” என்று கூறியுள்ளனர்.