தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்கள் தங்களுடைய பால் விலையை உயர்த்திய நிலையில் இன்று ஆரோக்கிய பால் நிறுவனம் ஆனது திடீரென தங்களுடைய பால் விலையை உயர்த்தியிருக்கிறது.
இன்று உயர்த்தப்பட்ட ஆரோக்கியா நிறுவனத்தின் பால் விலைப்படி லிட்டர் ஒன்றுக்கு 71 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரை லிட்டர் ஆரோக்கியா பால் பாக்கெட் ஆனது 37 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 38 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆரோக்கியாவின் உடைய ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து இருப்பது மக்களை அதிர்ச்சி உள்ளாக்கியுள்ளது.
அன்றாட பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலையானது கணிசமாக உயர்ந்து வந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில் தற்பொழுது ஆரோக்கிய பால் பாக்கெட்டும் விலை உயர்த்தப்பட்டு இருப்பது சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை விளைவிக்கும் என கூறப்படுகிறது.
பால் என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக முக்கியமான தேவையாக உள்ளது. நாளின் முதல் வேலையை துவங்குவதற்கு அனைவரும் டீ, காபி போன்றவற்றோடு தான் துவங்குகின்றனர் அப்படி இருக்க தற்பொழுது பாலின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது டீ காபியினுடைய விலைகளையும் உயர்த்துவதற்கு வழிவகை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.