Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பால் விலை மீண்டும் உயர்வு? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!

பால் விலை மீண்டும் உயர்வு? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!

தற்பொழுது தமிழகத்தில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தியதால், பால் பாக்கெட்களின் விலை உயர்த்தி உள்ளனர். அந்த வகையில் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை ரூ.60 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆரோக்கிய பாலும் தனது விலையை உயர்த்தியது. இது பாமர மக்களுக்கு பெரும் அடியாக உள்ளது. அதுமட்டுமின்றி ஸ்மார்ட் ரிலையன்ஸ் மட்டும் ஆவின் பாலை முந்தைய விலைக்கு கொடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து புகார் அளித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமுல் நிறுவனமும் பாலின் விலையை உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளிவந்தது. இது குறித்து அந்நிறுவனர் கூறுகையில், சென்ற மாதம் தான் அமல் பாலின் விலையானது லிட்டருக்கு 61 இல் இருந்து 63 ஆக உயர்த்தினோம்.

மீண்டும் உயர்த்துவது குறித்து எந்த ஒரு திட்டமும் இல்லை. பாலின் விலை உயரப் போகிறது என்று எங்கள் நிர்வாகம் சார்பாக ஏதேனும் பொய்த்தகர்கள் வந்தால் யாரும் நம்ப வேண்டாம் இவ்வாறு கூறினார்.

Exit mobile version