பால் விலை மீண்டும் உயர்வு! முதல்வரின் திடீர் ஆலோசனை கூட்டம்!

0
157
Shocking news for housewives!! Milk price rising again!!

பால் விலை மீண்டும் உயர்வு! முதல்வரின் திடீர் ஆலோசனை கூட்டம்!

தற்பொழுது தமிழ்நாடு கர்நாடகா போன்ற மாநிலங்களில் பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டதால் விற்பனை விலையையும் உயர்த்தி வழங்கியுள்ளனர்.

இவ்வாறு இருக்கும் நிலையில் பாண்டிச்சேரியில் மட்டும் பால் கொள்முதல் விலை தற்போது வரை உயர்த்தப்படமால் உள்ளதால் அங்கு பால் கொள்முதல் செய்ய முடியாமல் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒரு நாளைக்கு பாண்டிச்சேரியில் ஒரு லட்சம் லிட்டர்கள் தேவையாக உள்ள நிலையில், தற்பொழுது இதிலிருந்து 25 சதவீதம் குறைந்து வழங்கப்பட்டு வருவதால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து 65 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்ய படும் நிலையில், 25 ஆயிரம் லிட்டர் கர்நாடக மாநிலத்தில் கூட்டுறவு நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள பத்தாயிரம் லிட்டரை தனியார் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படுகிறது.

கர்நாடகாவில் இருந்து பெறப்படும் பால் ஒரு லிட்டருக்கு 46 ரூபாய் என்ற விலையில் வாங்கி பதப்படுத்தும் செலவாக ரூ.7 வரை ஆகும் நிலையில், மக்களுக்கு 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறு குறைந்த விலையில் பால் விற்பனை செய்யப்படுவதால் பான்லே நிறுவனத்திற்கு மட்டும் தினமும் 3.5 லட்சம் நஷ்டம் வருவதாக கூறுகின்றனர். இதனால் புதுச்சேரியில் தற்பொழுது பாண்லே பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பால் தட்டுப்பாடு குறித்து கொள்முதல் விலையை உயர்த்த கோரி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். விரைவில் இது குறித்து அரசாணை வெளிவரும் என்று கூறுகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு ,கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய்க்கு உயர்த்தியது போல தற்பொழுது புதுச்சேரியிலும் மூன்று ரூபாய் உயர்த்தப்படுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.