என்றும் இளமையாக இருக்க தேங்காய் பாலை மட்டும் சருமத்திற்கு பயன்படுத்துங்கள்.இயற்கையாகவே சருமத்திற்கு ஈரப்பதம் மற்றும் பொலிவு தரக் கூடிய தேங்காய் பாலை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் – ஒன்று
2)குங்குமப்பூ – சிறிதளவு
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)ஏலக்காய் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு தேங்காயை உடைத்து அதன் பருப்பை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து தேங்காய் பருப்பு மீதுள்ள தோலை நீக்கிவிட்டு பருப்பை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த தேங்காய் பாலை ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.
பிறகு இதை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.அடுத்து சிறிதளவு குங்குமப்பூ,வாசனைக்காக சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து பருகி வந்தால் சருமம் பளபளப்பாகும்.
தேங்காய் பால் சருமம் சார்ந்த பாதிப்புகளை குணமாக்க வல்லது.தேங்காய் பாலை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் இயற்கையன ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.வெறும் தேங்காய் பால் மட்டும் வைத்து சரும அழகை மேம்படுத்த முடியும்.
தேங்காய் பாலில் க்ரீம்,ஸ்க்ரப்,மாய்ஸ்சரைசர் என்று பல அழகு சாதனப் பொருட்கள் தயாரித்து பயன்படுத்தலாம்.தேங்காய் பாலை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முதுமையை சில காலத்திற்கு தள்ளிப்போடலாம்.தேங்காய் பால் சருமத்திற்கு மட்டுமின்றி தலைக்கும் நல்ல ஈரப்பதத்தை தரக்கூடியவை.எனவே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தேங்காய் பாலை பயன்படுத்தி வாருங்கள்.