சத்து நிறைந்த பால் காய்கறி சூப் செய்வது எப்படி?

0
153
Milk Vegetables Soup

சத்து நிறைந்த பால் காய்கறி சூப் செய்வது எப்படி?

பால் ஒரு முழுமையான ஊட்டச்சத்து என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். பாலில் எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் உள்ளது. அதுமட்டுமின்றி புரதச்சத்தும்
மிகுதியாக உள்ளது. நமது விருப்பதிற்கும் ருசிக்கும் ஏற்றச் சத்து நிறைந்த பல வகையான காய்கறிகளையும் சேர்த்து சூப் தயாரித்து உட்கொண்டால் பூரணமான உணவாகவே இது அமையும்.

பால்- காய்கறி சூப்

தேவையான பொருட்கள்:

பால் – 500 மில்லி லிட்டர்.

ஆட்டா மாவு – 2 தேக்கரண்டி.

வேக வைக்கப்பட்ட காய்கறிகள்- 300 கிராம்.

வெண்ணெய்- 2 மேசைக்கரண்டி.

மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றைக் கலந்து 300 கிராம் அளவுக்குச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இவற்றை நறுக்கி ஒரு லிட்டர் தண்ணீரில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வைத்து வெண்ணையைச் சேர்த்து உருகிய உடன் மாவைக் கொட்டவும். காய்கறிகளைச் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பின்னர் பாலை சேர்த்து சுட வைக்க வேண்டும். கடைசியாக மிளகு, உப்புத் தூள் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பரிமாறலாம்.