விற்பனையாகாத 20 கோடி தடுப்பூசிகள்! தயாரிப்பு நிறுவனம் வேதனை!

0
131

இந்தியாவின் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அந்த நோய்களுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மத்திய, மாநில, அரசுகளும் மிகத்தீவிரமாக இறங்கினர்.அதன் பலனாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த மருந்துகளை பல கட்டமாக பரிசோதனையும் செய்து இது இந்த நோய் தொற்றுக்கு எதிராக செயல்படும் என்று உறுதி செய்து கொண்ட மத்திய, மாநில அரசுகள் மெல்ல,மெல்ல, பொதுமக்களுக்கு செலுத்தத் தொடங்கினர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் 187,26,515 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிச்ஷீல்டு தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விற்பனை செய்யப்படாமல் கோடிக்கணக்கில் தடுப்பூசி கையிருப்பிலிருப்பதால் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் கூறியிருக்கிறது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவிக்கும்போது, தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து விற்பனையாகாத தடுப்பூசிகள் அதிகளவில் எங்களிடம் தற்சமயம் கையிருப்பிலுள்ளது என தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் பணியை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ம் தேதியே நிறுத்திவிட்டோம் விற்பனை செய்யப்படாத 20 கோடி தடுப்பூசிகள் எங்களிடமிருக்கிறது.

இந்த தடுப்பூசிகளை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரையில் இது குறித்து எந்தவிதமான பதில்களும் எங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.