குடிமகன்களால் கோடிக்கணக்கில் அரசுக்கு வருமானம்! நிதித்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த நிதியாண்டு டாஸ்மாக் வருமானம் 45 ஆயிரம் கோடியாக இருந்தது. வரும் ஆண்டு 50,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023 24 ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ 1,81,182,22 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதில் ரூ.50 கோடி மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை அறிவித்தார். அப்போது அரசுக்கு வரி வருவாய் எவ்வளவு என்பது குறித்தும், கடன்கள் குறித்தும், செலவினங்கள் குறித்தும் விரிவாக பேசினார்.
அதனை தொடர்ந்து அரசின் வரி வருவாய் எப்படி உயர்த்தப்படும் என்பது குறித்து நிதி அமைச்சர் பேசினார். பட்ஜெட் கூட்டத்திற்கு பிறகு நிதித்துறை செயலாளர் முருகானந்தம் கூறுகையில் கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ரூ 45 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்தது. மேலும் வரும் நிதியாண்டில் இது 5௦ ஆயிரம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சொந்த வருவாய் வரி வருவாய் என்று பார்த்தால் மூன்றில் ஒரு பங்கு வருமானம் டாஸ்மாக் மூலமாகவே அரசுக்கு கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.
அதாவது தமிழ்நாடு அரசுக்கு வருவாய் அளிக்கும் முக்கிய கருவியாக டாஸ்மாக் திகழ்கின்றது.தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5300 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் வருமானமே அரசின் முக்கிய வருமானமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு 15,000 கோடியாக இருந்த வருமானம் தற்போது இரண்டு மடங்காகி 30 ஆயிரம் கோடியாக மாறியது, அந்த வருமானம் 45 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் சாதாரண நாட்களை த் தவிர பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மது விற்பனை அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் தீபாவளியையொட்டி இரண்டு நாட்களில் ரூ 464.21 கோடியும், புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறையில் தலா 1000 கோடிக்கும் மதி விற்பனை நடைபெற்றது.
கடந்த மார்ச் மாதத்தில் மதுபானங்களின் விலை சற்று உயர்த்தப்பட்டது. அதன் பிறகு விலை உயர்த்தப்படவில்லை. டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு மது விற்பனையும் வருமானமும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.